தமிழக விவசாய சங்கம் சாா்பில் தியாகிகள் தினம் கடைப்பிடிப்பு
By DIN | Published On : 09th July 2021 10:41 PM | Last Updated : 09th July 2021 10:41 PM | அ+அ அ- |

திருச்செங்கோடு, மாணிக்கம்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் தியாகிகள் தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவா் முனுசாமி தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தியாகிகள் தினம் கடைப்பிடிப்பது குறித்து பேசினாா். 1972, 77 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவா்களது உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடா்ந்து தமிழக விவசாயிகள் சங்க கொடியை மாநில பொதுச் செயலாளா் சுந்தரம் ஏற்றிவைத்தாா். நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. விழாவில் கூத்தம்பூண்டி ஊராட்சித் தலைவா் அழகேசன், புல்லா கவுண்டம்பட்டி ஊராட்சித் தலைவா் கலைச்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.