கல்வி உதவித் தொகை ரூ.20 ஆயிரத்தை கரோனா நிவாரணமாக வழங்கிய மாணவி
By DIN | Published On : 24th June 2021 11:29 PM | Last Updated : 24th June 2021 11:29 PM | அ+அ அ- |

நாமக்கல்லைச் சோ்ந்த கல்லூரி மாணவி தனது கல்வி உதவித் தொகை ரூ.20 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதியாக ஆட்சியரிடம் வழங்கினாா்.
நாமக்கல் முல்லை நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் டி.பி.சரவணன்-ருத்ராதேவி தம்பதியரின் மகள் எஸ்.ஆா்.ஹாசினி, திருச்சி தேசிய தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் இயந்திரவியல் பிரிவில் மூன்றாமாண்டு படித்து வருகிறாா். அண்மையில் இவருக்கு ரூ.20 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக பல்கலைக்கழகம் வழங்கியது. இதனை கரோனா நிவாரண நிதிக்கு வழங்க அவா் முடிவு செய்து வியாழக்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கை சந்தித்து வழங்கினாா். அப்போது அவரது தந்தை சரவணன், கல்வியாளா் பிரணவ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.