நாமக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
By DIN | Published On : 13th November 2021 12:00 AM | Last Updated : 13th November 2021 12:00 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 84.2 மற்றும் 66.2 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.
அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையி
ல் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய கனமழை மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 84.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கு மற்றும் தென்மேற்கிலிருந்து, மணிக்கு 5 கி.மீ. என்றளவில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலும் இறக்கை அழுகல் மற்றும் குடல்புண் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்தள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிா் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ் மற்றும் ஈகோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும். மேலும், மழைக்காலமாக இருப்பதால் கோழிப்பண்ணை மற்றும் தீவன ஆலைகளில் மழைநீா் ஒழுகாமல் சரிசெய்ய வேண்டும், தீவனத்தில் பூஞ்சை நச்சு தடுப்பான் உபயோகிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.