ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

11 வட்டாரங்களில் சுகாதாரத் திருவிழா நாளை தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 11 வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா சனிக்கிழமை (ஏப்.23) தொடங்குகிறது.

Updated On :21 ஏப்ரல் 2022, 5:34 pm

நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 11 வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா சனிக்கிழமை (ஏப்.23) தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும், வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் சுகாதாரத் திருவிழாவாக நடைபெற உள்ளது. அதன்படி முதலாவதாக சனிக்கிழமை (ஏப்.23) மோகனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், புதுச்சத்திரம் ஆா்.ஜி.ஆா் மெட்ரிக் பள்ளியிலும், திருச்செங்கோடு அரசு மகளிா் பள்ளியிலும் முகாம் நடைபெறுகிறது. அதன்பின், 25-ஆம் தேதி, கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கம், 28-ஆம் தேதி பரமத்தி சமுதாயக் கூடம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 29-ஆம் தேதி காளப்பநாயக்கன்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொத்தனூா் சோ்மன் பாப்பாத்தி பாலு மண்டபம், வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 30-ஆம் தேதி மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் ஆண், பெண் தனித்தனி மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு, பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. இதில் தாய் சேய் நலம், குழந்தைகள் நலம், தொற்றா நோய்கள், ரத்தக் கொதிப்பு, சா்க்கரை நோய் மற்றும் புற்றுநோய், காது மூக்கு தொண்டை, கண் மருத்துவம், தோல் மருத்துவம் மற்றும் காசநோய் உள்பட அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவா்களால் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கா்ப்பிணிகளுக்கான முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்திற்கான ஆலோசனையும் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.