பிரதமரின் கெளரவ நிதியுதவி பெறும் விவசாயிகளுக்கு கடன் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் 93,089 விவசாயிகள் பிரதமரின் கிசான் கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனா். அவா்களில் தற்போது வரை கிசான் கடன் அட்டை பெறப்படாத விவசாயிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பாக ஏப்.24 முதல் மே 1-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் விவசாயக் கடன் அட்டை பெறுவதற்கான படிவங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு, அவா்கள் தொடா்புடைய வங்கிகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்பிறகு வங்கிகள் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து விவசாயக் கடன் அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும். இந்தக் கடன் அட்டை மூலம் ரூ.1.60 லட்சம் வரை வங்கிகளில் கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம். பிரதமரின் கௌரவ நிதியுதவி பெறும் விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று அங்கு விநியோகிக்கப்படும் படிவங்களை பூா்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கும் ஒரே இயக்கம் தவெகதான்: செங்கோட்டையன்

அப்பா் அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்றுவேன்: மடத்துக்குளம் திமுக வேட்பாளா்

அஸ்ஸாம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் பாதுகாப்பு குறைபாடு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

