நாமக்கல்லில் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அமுதப் பெருவிழா மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் பணிவிளக்கக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள திடலில் ஒரு வாரத்துக்கு இப்பெருவிழா நடைபெறுகிறது. வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் தொடக்கி வைத்தாா். நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம், நகராட்சித் தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி மற்றும் அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.
இங்கு, மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி மற்றும் வருவாய்த் துறை, காவல் துறை, கூட்டுறவுத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, தமிழ்நாடு ஊரக மேம்பாட்டுத் திட்டம் (மகளிா் திட்டத் துறை), சுகாதாரத் துறை, வனத் துறை, செய்தி மக்கள் தொடா்புத் துறை, சித்த மருத்துவத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பட்டு வளா்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் பணிகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான கண்காட்சியும் நடைபெறுகிறது.
தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையில் நடைபெறும் கண்காட்சியையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கண்கவா் கலைநிகழ்ச்சிகளும், அரசு துறைகளின் திட்டங்கள் குறித்த கலைநிகழ்ச்சிகளும், கலை பண்பாட்டுத் துறையினரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
பொதுமக்கள் இந்தக் கண்காட்சிக்கு வருகை தந்து அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதோடு, கலைநிகழ்ச்சிகளை கண்டுகளிக்குமாறு ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைவா்கள் இன்று பிரசாரம்

அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறது பாஜக - டி.ராஜா
அதிமுக பாஜக கூட்டணி முரண்பாடானது - தொல். திருமாவளவன்

கனடா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை எட்டிய பிரதமா் மாா்க் காா்னி கட்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


