“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நாமக்கல்: வாகனச் சோதனையில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

நாமக்கல் நகரப் பகுதியில் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

நாமக்கல் நகரப் பகுதியில் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பறக்கும் படை குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அண்மையில் பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் இருவரது வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நாமக்கல், முதலைப்பட்டிப்புதூா் அருகே புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் நகராட்சி பறக்கும்படை குழு - 2 தலைமை அலுவலா் கே.சங்கா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது நாமக்கல் கொசவம்பட்டியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் என்பவா் காரில் வந்து கொண்டிருந்தாா். அவரது காரை சோதனையிட்டதில் உரிய ஆவணங்களின்றி ரூ.1. 50 லட்சம் பணம் இருந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களை காண்பித்து திரும்ப பெற்றுச் செல்லுமாறு தமிழ்ச்செல்வனிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.