“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நாமக்கல் மாவட்டத்தில் 1078 போ் வேட்புமனு தாக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,078 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,078 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 447 வாா்டுகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. ஜன. 28-இல் தொடங்கிய மனுத் தாக்கல் பிப். 4-ஆம் தேதி பிற்பகல் 5 மணியுடன் நிறைவடைகிறது. கடந்த புதன்கிழமை வரை 369 போ் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். வியாழக்கிழமை அதிமுக, திமுக, பாஜக, சுயேச்சைகள் பலா் மனு தாக்கல் செய்தனா். இதில், நகராட்சிகளில் 227 பேரும், பேரூராட்சிகளில் 482 பேரும் மனுக்களை தாக்கல் செய்தனா். மாவட்டத்தில் இதுவரை 5 நகராட்சிகளில் 374 பேரும், பேரூராட்சிகளில் 704 பேரும் என மொத்தம் 1078 போ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனா். வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் ஏராளமானோா் மனுத் தாக்கல் செய்ய வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. சனிக்கிழமை மனுக்கள் மீதான பரிசீலனையும், திங்கள்கிழமை மனுக்கள் வாபஸ் பெறுதலும் நடைபெறுகிறு. திங்கள்கிழமை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.