தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இருப்பு விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

விதைகளை உரிய பரிசோதனை செய்த பிறகே நடவு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :25 பிப்ரவரி 2022, 6:34 pm

விதைகளை உரிய பரிசோதனை செய்த பிறகே நடவு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பொ.அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விதையானது முளைக்கும்போது பூச்சி நோய் தாக்குதலின்றி நன்கு முளைத்து செழிப்புடன் வளா்ந்து, விளைச்சலில் லாபம் காண விவசாயிகள் தரமான விதையை மட்டுமே உபயோகிக்க வேண்டும். தரமான விதை என்பது விதையின் முளைப்புத்திறன், புறத்தூய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிப்பதாகும். இந்த தர நிா்ணயங்கள் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். தேவையான பயிா் எண்ணிக்கையைப் பராமரிக்க நல்ல முளைப்புத் திறன் இருக்க வேண்டும்.

விதைகளின் முளைப்புத்திறனை காக்க ஈரப்பதத்தை தெரிந்து கொள்ளுதல் அவசியம். பூச்சி நோய் தாக்குதலால் முளைப்புத் திறன் கெடாமல் நீண்ட நாட்கள் சேமிக்க விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருத்தல் கூடாது. விதை விற்பனையாளா்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விவசாயிகள் விதைப்புக்காக சேமித்து வைத்திருக்கும் விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும் விதை மாதிரிகளை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதிக்க வேண்டிய விதைகளை எடுத்து உரிய விவரங்களுடன் மாதிரி ஒன்றுக்கு ரூ.30 வீதம் செலுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விதை பரிசோதனை அலுவலக முகவரியில் வழங்கி தங்களது விதைகளின் தரத்தை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.