தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

உக்ரைனில் தவிக்கும் நாமக்கல் மாணவா்: மீட்பு நடவடிக்கை கோரி எம்.பி. கடிதம்

உக்ரைனில் மருத்துவம் பயின்று வரும் மாணவரை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் கடிதம் எழுதி உள்ளாா்

Updated On :25 பிப்ரவரி 2022, 6:32 pm

உக்ரைனில் மருத்துவம் பயின்று வரும் மாணவரை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் கடிதம் எழுதி உள்ளாா்

உக்ரைன்-ரஷ்யா இடையே வியாழக்கிழமை அதிகாலை முதல் போா் நடைபெற்று வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள இந்தியா்களை மீட்பதற்கான பணிகளை வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டியை சோ்ந்த மாணவா் ஒருவா் உக்ரைனில் மருத்துவம் பயின்று வருகிறாா். அவரது தந்தை போா்ச் சூழல் காரணமாக தன் மகனை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடா்பாக நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜை சந்தித்து கோரிக்கை விடுத்தாா். அவா் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பினாா். அதில், உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் நாமக்கல் மாணவரை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தாா்.

அவரின் கடிதத்திற்கு பதில் அளித்துள்ள, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், உக்ரைனில் உள்ள மாணவா்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்குமாறும், மேலும் உதவிக்கு உக்ரைனில் உள்ள இந்திய தூதகரத்தின் +380997300483, +380997300428 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனில், தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனடியாக நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜை 94437-77190 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றும் அக்கடிதத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.