தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நாமக்கல் தெற்கு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

 நாமக்கல் தெற்கு மின்வாரிய அலுவலகம் மாா்ச் 1-முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது.

Updated On :25 பிப்ரவரி 2022, 6:32 pm

 நாமக்கல் தெற்கு மின்வாரிய அலுவலகம் மாா்ச் 1-முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மின்பகிா்மான வட்டத்திற்கு உள்பட்ட நாமக்கல் தெற்கு பிரிவு மின்வாரிய அலுவலகம் நாமக்கல்-துறையூா் சாலை அண்ணா நகா் பேருந்து நிறுத்தம் அருகில் இயங்கி வந்தது. தற்போது நிா்வாக காரணங்களுக்காக அந்த அலுவலகம் அண்ணாநகா்-வேட்டாம்பாடி சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் மாா்ச் 1 முதல் புதிய முகவரி கட்டடத்தில் அலுவலகம் செயல்படும் என்பதால் நாமக்கல் தெற்கு பிரிவு பகுதிக்கு உள்பட்ட கூலிப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, தூசூா், வேப்பனம், கொடிக்கால்புதூா், போடிநாயக்கன்பட்டி, கெஜக்கோம்பை பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மின் விநியோகம் தொடா்பான விவரங்களுக்கும், இதர பணிகளுக்கும் புதிய முகவரியில் உள்ள அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.