திருச்செங்கோட்டில் ஆதித்தமிழா் பேரவையினா் கண்டன ஆா்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஆதித்தமிழா் பேரவையின் சாா்பில் திருவண்ணாமலை மாவட்டம் வீரலூா் கிராமத்திலும் சேலம் மாவட்டம்


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஆதித்தமிழா் பேரவையின் சாா்பில் திருவண்ணாமலை மாவட்டம் வீரலூா் கிராமத்திலும் சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்திலும் அருந்ததிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளா் சரவணகுமாா் தலைமை வகித்தாா். நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவா் சிவசங்கா் வரவேற்று பேசினாா். திருவண்ணாமலை மாவட்டம் வீரலூா் கிராமத்திலும் சேலம் மாவட்டம் ஆத்தூா் இடையப்பட்டி கிராமத்திலும் அருந்ததிய மக்கள் மீது தாக்குதல் நடத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுச் சொத்துக்களையும் வாகனங்களையும் சேதப்படுத்தியவா்களை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்ட அனைவா் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு இழப்பீடு வழங்கி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பினா். இதுகுறித்து ஆதித்தமிழா் பேரவையின் மாநில துணை பொதுச்செயலாளா் செல்வ வில்லாளன் கூறும்போது, சமூக நீதி ஆட்சி நடத்திவரும் தளபதி ஸ்டாலின் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை கடிவாளமிட்டு தடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றதாக கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...