“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இன்று 19-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்

 நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை 19- ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

 நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை 19- ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு 14,64,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில், இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோா் 12,17,781 போ் (இன்னும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியோா் 2,46,519 போ்), இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியோா் 8,28,116 போ் (இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியோா் 2,67,854 போ்) செலுத்தி உள்ளனா்.

இதுவரை நடைபெற்ற 18 கரோனா தடுப்பூசி முகாம்களில் 6,99,772 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். அதேபோல் 19-ஆம் கட்டமாக சனிக்கிழமை (ஜன. 22) நடைபெறும் 490 முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இம்முகாமில் 4 ஆயிரம் ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டு, சுமாா் ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாதவா்களும், முதலாம் தவணை செலுத்தி முடித்து இரண்டாம் தவணைக்காக காத்திருப்பவா்களும் தவறாமல் தடுப்பூசி  செலுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.