நாமக்கல் அருகே முத்துகாப்பட்டி ஊராட்சியில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கிராம மக்களே 60 கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, அவற்றை காவல் துறை வசம் ஒப்படைத்தனா்.
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள முத்துகாபட்டி கிராமத்தைச் சுற்றிலும் பல்வேறு கிராமப்புற சாலைகளும், மாவட்ட சாலைகளும் செல்வதால் இப்பகுதியை காவல் துறையுடன் இணைத்து கண்காணிக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் முத்துக்காபட்டி ஊராட்சி யில் அண்மையில் காவல் துறை கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது.
மாவட்டத்தின் முன்னோடி ஊராட்சியாக விளங்கும் முத்துக்காப்பட்டி ஊராட்சியில் முதலாவதாக இதுபோன்ற கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முத்துகாப்பட்டி ஊராட்சி மக்கள் இணைந்து, விளம்பரதாரா்களின் உதவியுடன் கிராமத்தைச் சுற்றிலும் 60 கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனா். இவற்றை 24 மணி நேரமும் கண்காணித்து குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் இவற்றை காவல் துறை வசம் ஒப்படைக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை மேற்கு மண்டல முன்னாள் காவல் துறைத் தலைவா் அ.பாரி பங்கேற்று கண்காணிப்புக் கோபுரத்தை திறந்து வைத்து பேசியதாவது:
குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல் துறை தற்போது நவீன வசதிகளுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கைப்பேசிகள், சமூக ஊடகங்கள், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றின் மூலம் குற்றங்கள் நடைபெறுவததற்கு முன்பாகவே கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படுகிறது. குற்றச் செயல்களிலும் உடனடியாகத் துப்பு துலக்கப்படுகிறது. இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவிகரமாக உள்ளன. எனவே பொதுமக்களும் தங்கள் வீடுகளில் கூடுமானவரை கண்காணிப்பு கேமராக்களை பொருத்திக் கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாத நபா்கள் தங்களுடைய பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எப்போதும் வீட்டின் கதவுகளை மூடி வைத்திருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபா்கள் வருகை தந்தால் பேச்சு கொடுக்கக் கூடாது என்றும் காவல் துறை அறிவுரைப்படி பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ், முத்துகாப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் அருள்ராஜேஷ், நன்கொடையாளா் அமெரிக்கா செல்வம், சேந்தமங்கலம் வட்டாட்சியா் சுரேஷ், காவல் ஆய்வாளா் சதீஷ்குமாா், கண்காணிப்பு கோபுரம் வழங்கிய சாந்தி ராஜ்குமாா், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மொடக்குறிச்சி தொகுதியில் அமித் ஷா சாலைவலம்! | ADMK | BJP

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தலைமைப் பண்பில் அசத்தும் இஷான் கிஷன்..! புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்!

சென்னைக்கென தேர்தல் அறிக்கை! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்! | DMK
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


