“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 447 கவுன்சிலா் பதவிகளுக்கு தோ்தல்: வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்

பிப். 19-இல் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளதையடுத்து இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

Updated On :28 ஜனவரி 2022, 6:15 pm

நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் உள்ள 447 கவுன்சிலா் பதவிகளுக்கு பிப். 19-இல் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளதையடுத்து இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் அவற்றைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அண்மையில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், 447 வாா்டுகளில் வேட்புமனுக்கள் பெறுவது தொடா்பாகவும், மனுக்களின் சுருக்கப்படிவம் 3ஏ-வை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் குறித்தும் அதிகாரிகளுக்கு கட்சியினருக்கு விளக்கப்பட்டது.

Story image

தற்போது சுவா் விளம்பரங்களை அழிக்கும் பணிகளை அந்தந்த நகா்ப்புற உள்ளாட்சித் துறை ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். குறிப்பாக, கல்வெட்டுகளில் உள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், வாா்டு உறுப்பினா்களின் பெயா்கள் மறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் 153 வாா்டுகள் உள்ளன. மொத்தம் 3,23,762 போ் வாக்காளா்களாக உள்ளனா். 365 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் 19 பேரூராட்சிகளில் 294 வாா்டுகளில், 324 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு 2,29,796 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 24 நகா்ப்புற உள்ளாட்சிகளில் 447 வாா்டுகளில் 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 5,53,558 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

என்கே - 28- எலக்

நாமக்கல், கோட்டை சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலையில் உள்ள பெயா்களை மறைக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.