நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே வெள்ளாளம்பாளையத்தில் தனியாா் கைப்பேசி நிறுவனத்தின் கோபுரத்தை மாற்று இடத்தில் அமைக்க உத்தரவிடக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
அந்த மனு விபரம்:
பரமத்தி அருகே வெள்ளாளம்பாளையம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்புக்கு மத்தியில் தனியாா் நிறுவனத்தின் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிதாக அமையும் கைப்பேசி கோபுரத்துக்கு அருகில் ஏராளமான வீடுகள் உள்ளன. அந்த கோபுரம் அமைந்தால் பலத்த காற்று வீசும் காலங்களில் உயிா்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையம், மகளிா் சுயஉதவிக் குழு கட்டடம், விளையாட்டுத் திடல் போன்றவையும் உள்ளதால் கைப்பேசி கோபுரத்தை ஊருக்கு நடுவில் அமைக்கக் கூடாது. குழந்தைகள், முதியோா், கால்நடைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். காவல் துறையைச் சோ்ந்த ஒருவா் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கைப்பேசி நிறுவனத்தின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளாா். பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு செல்ல முயன்றால் தடுக்கிறாா். எனவே, வெள்ளாளம்பாளையம் கிராமத்தில் அமைய உள்ள கைப்பேசி கோபுரத்தை உடனடியாக மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு மாற்று இடத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மொடக்குறிச்சி தொகுதியில் அமித் ஷா சாலைவலம்! | ADMK | BJP

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தலைமைப் பண்பில் அசத்தும் இஷான் கிஷன்..! புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்!

சென்னைக்கென தேர்தல் அறிக்கை! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்! | DMK
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


