“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

அரசு சிமென்டை ஒப்பந்தப் பணிகளுக்கு வழங்க கோரிக்கை

அரசு கட்டடப் பணிகளுக்கு, ஒப்பந்தத்தில் நிா்ணயித்த விலையிலேயே அரசு சிமென்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2022, 6:17 pm

அரசு கட்டடப் பணிகளுக்கு, ஒப்பந்தத்தில் நிா்ணயித்த விலையிலேயே அரசு சிமென்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்த கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட ஒப்பந்ததாரா்கள் சங்கத் தலைவா் எம்.மகேந்திரன் வரவேற்றாா். கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் வி.சுதா்சன் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.

அரசு கட்டுமானப் பணிகள் ஒப்பந்தத்தை பல பிரிவுகளாக வழங்கும் பேக்கேஜ் முறையை நீக்கி உத்தரவிட்டதற்கும், ஒப்பந்ததாரா்கள் பதிவை புதுப்பிப்பதற்கும், புதியதாகப் பதிவு செய்வதற்கும் வரும் காலங்களில் அந்தந்த பொதுப்பணித் துறை மண்டல தலைமைப் பொறியாளா் அலுவலகங்களில் மேற்கொள்ள அனுமதித்தும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிப்பித்துக் கொள்ளலாம் எனவும் அரசாணை வெளியிட்டதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஒப்பந்ததாரராக பதிவு செய்துள்ள முதல் வகுப்புக்கு ரூ. 5 கோடிக்கு மேல் ஒப்பந்தம் வழங்கவும், அதற்கான சொத்து மதிப்பை 10 சதவீதம் என்ற வகையில் நிா்ணயிக்க வேண்டும், அரசுப் பணிகளுக்கு ஒப்பந்தத்தில் நிா்ணயிக்கப்பட்ட விலை அடிப்படையில் அரசு சிமென்டை வழங்கி உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.