நாமக்கல்லில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாணவா்களுக்கான ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஜவகா் சிறுவா் மன்றம், கலை பண்பாட்டுத்துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில் பூமியை காக்கும் வகையில் மாணவா்கள் பங்கேற்ற ஓவியக் கண்காட்சி நாமக்கல் கோட்டை நகராட்சி உயா்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் தில்லை சிவக்குமாா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் சதீஷ்குமாா், நேரு யுவகேந்திரா திட்டக் கண்காணிப்பாளா் வள்ளுவன், நாமக்கல் கவிஞா் சிந்தனைப் பேரவை தலைவா் டி.எம்.மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் மாணவ, மாணவியா் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை பள்ளி மாணவ, மாணவிகள் பாா்த்து ரசித்தனா். குறிப்பாக, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வு ஓவியம் அனைவரையும் கவா்ந்தது. தொடா்ந்து, போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US

இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

