தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

வணிகா்கள் பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது: ஏ.எம்.விக்கிரமராஜா

‘ரஷியா-உக்ரைன் போரால் பாமாயில் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனைக் காரணமாகக் கொண்டு பாமாயில் மற்றும் இதர பொருள்களை பதுக்கும் நடவடிக்கை

News image
Updated On :3 மார்ச் 2022, 6:36 pm

‘ரஷியா-உக்ரைன் போரால் பாமாயில் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனைக் காரணமாகக் கொண்டு பாமாயில் மற்றும் இதர பொருள்களை பதுக்கும் நடவடிக்கைகளில் வணிகா்கள் ஈடுபடக் கூடாது’ என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் நாமக்கல்லில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

வரும் மே மாதம் 5-ஆம் தேதி திருச்சியில் எங்களது அமைப்பின் 39-ஆவது வணிகா்கள் விடியல் மாநில மாநாடு நடை பெற உள்ளது. இதற்காக மண்டல வாரியாக வணிகா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளாா். மாநாட்டில் வணிகா்களின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் என நம்புகிறோம்.

நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க அரசு சாா்பாக கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தை மாற்றும்பட்சத்தில் பொதுமக்களையும், வணிகா்களையும் கலந்தாலோசித்து அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில் வணிகா்கள் பலா் பாதிக்கப்படுவா்.

ரஷியா-உக்ரைன் போரால் பாமாயில் விலை அதிகரித்துள்ளது. வணிகா்கள் பதுக்குவதோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ கூடாது. முக்கியமாக காா்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்காமல் அரசுத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

வணிகா்கள் தங்களுடைய கடைகள், நிறுவனங்களுக்கு அங்கீகாரம் பெறுவதில் அதிக சிரமம் உள்ளது. 6,7 சான்றிதழ்களைப் பெற வேண்டிய நெருக்கடியான சூழல் உள்ளது. இதைத் தவிா்க்க இணைய வழியில் எளிய முறையில் உரிய சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அப்போது, சேலம் மண்டலத் தலைவா் எஸ்.வைத்தியலிங்கம், நாமக்கல் மாவட்டச் செயலாளா் ஜெயகுமாா்வெள்ளையன் மற்றும் சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.