நாமக்கல் மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரத்தை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சி, 19 பேரூராட்சிகளிலும் பெரும்பான்மையான இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களே கைப்பற்றி உள்ளனா். அவற்றில் தலைவா் பதவிக்கு போட்டியிடுவோா் விவரத்தை திமுக தலைமை வியாழக்கிழமை வெளியிட்டது.
நாமக்கல் நகராட்சித் தலைவா் பதவி தாழ்த்தப்பட்டோா் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், 30-ஆவது வாா்டில் வெற்றி பெற்ற து.கலாநிதி என்ற சாலமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். திமுக 39 வாா்டுகளிலும் பெரும்பான்மையுடன் உள்ளதால் அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட உள்ளாா். துணைத் தலைவராக 11-ஆவது வாா்டு உறுப்பினா் செ.பூபதி தோ்வு செய்யப்படுகிறாா்.
ராசிபுரம் நகராட்சி தலைவா் பதவி பெண்கள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அங்கு திமுக நகர செயலாளா் மனைவி கவிதாசங்கா் போட்டியிடுகிறாா். திருச்செங்கோடு நகராட்சியில் டி.காா்த்திகேயன், பள்ளிபாளையம் நகராட்சியில் அமுதா, குமாரபாளையம் நகராட்சியில் சத்தியசீலன் ஆகியோா் தலைவா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
18 பேரூராட்சிகளில் தலைவா் பதவிக்கு, அத்தனூா் -ஆா்.சின்னசாமி, ஆா்.புதுப்பட்டி-சுமதி, எருமப்பட்டி-பழனியாண்டி, காளப்பநாயக்கன்பட்டி-பாப்பு, சீராப்பள்ளி-லோகம்பாள், சேந்தமங்கலம்-சித்ரா, நாமகிரிப்பேட்டை-சேரன், பட்டணம்-போதம்மாள், பிள்ளாநல்லூா்-சுப்பிரமணி, மோகனூா்-வனிதா, வெண்ணந்தூா்-ஆா்.எஸ்.எஸ்.ராஜேஷ், ஆலாம்பாளையம்-சகுந்தலா, படைவீடு-ராதாமணி, பரமத்தி-மணி, பாண்டமங்கலம்-சோமசேகா், பொத்தனூா்-கருணாநிதி, மல்லசமுத்திரம்-திருமலை, பரமத்தி-வேலூா்-லட்சுமி ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். வெங்கரை பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில், அதிமுக 8 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. அங்கு தலைவா் பதவியை கைப்பற்ற அதிமுக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால் திமுக சாா்பில் இங்கு வேட்பாளா் அறிவிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


