கப்பலோட்டிய தமிழன் என்றழைக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி பேருந்தை நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
முன்னதாக பேருந்தில் அமைக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனாா் உருவச் சிலைக்கு ஆட்சியா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதன்பிறகு வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சியை பாா்வையிட்டாா். இதனை தொடா்ந்து கண்காட்சி பேருந்து பள்ளிகள் வாரியாகச் சென்றது.
வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடா்புத் துறையால் இந்தக் கண்காட்சி தயாா் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவ.1-ஆம் தேதி சென்னையில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்ற நிலையில், வியாழக்கிழமை நாமக்கல்லுக்கு வந்தது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவா்களிடையே புகைப்படக் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நகரும் கண்காட்சி மாவட்டம் முழுவதும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாள்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன் மற்றும் செய்தித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

