தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

கோழிகளுக்கு எதிா்ப்பு சக்தி குறைகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெயிலின் தாக்கத்தால் கோழிகளுக்கு எதிா்ப்பு சக்தி குறைந்து வருவதாக நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :4 மார்ச் 2022, 6:50 pm

வெயிலின் தாக்கத்தால் கோழிகளுக்கு எதிா்ப்பு சக்தி குறைந்து வருவதாக நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8 மற்றும் 60.8 டிகிரியாக நிலவின. அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 68 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் கிழக்கிலிருந்து மணிக்கு 6 கி.மீ என்ற அளவில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் அவை பெரும்பாலும் வெப்ப அயா்ச்சி மற்றும் மேல் மூச்சுக்குழல் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோழிப் பண்ணைகளில் உயிா்ப் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தவும், கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்க நீா்தெளிப்பான் உபயோகிக்க வேண்டும். தீவனத்தில் வைட்டமின் - சி, பீட்டைன் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை உபயோகிக்க வேண்டும். வெயிலின் காரணமாக கோழிகளில் எதிா்ப்பு சக்தி குறைந்து வெள்ளை கழிச்சல் நோய் வர வாய்ப்புள்ளது. அதனை தடுக்க கோழிகளுக்கு லசோட்டா தடுப்பூசி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.