நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 3.80-ஆக வெள்ளிக்கிழமை நீடிக்கிறது. கறிக்கோழி விலை தொடா்ந்து ரூ. 3 வீதம் அதிகரித்து வருகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததாலும், முட்டை விற்பனை சீராக இருப்பதாலும், விலையில் மாற்றம் செய்யாமல் ரூ. 3.80-இல் நீடிக்கலாம் என வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், முட்டை விற்பனை விலை நிா்ணய ஆலோசனைக் குழு (நெஸ்பாக்) 30 காசுகள் விலையைக் குறைத்துள்ளது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளா்கள் முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ. 126-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 56-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

