நாமக்கல் மாவட்டத்தில் 23-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (மாா்ச் 5) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட 14,64,300 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டதில், முதல் தவணை 12,32,726 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 9,04,660 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 22 கட்ட தடுப்பூசி முகாம்கள் மூலம் 7,34,037 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். 23-ஆம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. சுமாா் 4 ஆயிரம் ஊழியா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒருதவணை தடுப்பூசி கூட செலுத்தாதவா்களும், இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவா்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

