தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மாா்ச் 14-இல் பாமாருக்மணி நந்தகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

 நாமக்கல் அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள பாமாருக்மணி சமேத நந்தகோபால சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :10 மார்ச் 2022, 6:47 pm

 நாமக்கல் அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள பாமாருக்மணி சமேத நந்தகோபால சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம் மோகனூா் வட்டம் எஸ்.வாழவந்தி கிராமம் கே.புதுப்பாளையத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் குலதெய்வ கோயிலும், பயிடிக்குத்தலவாா் (பைரங்குலம்) சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட பாமாருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பரிவார மூா்த்திகளுக்கு சிலைகள் அமைக்கப்பட்டும், காவல் தெய்வமான மதுரைவீரன் சுவாமிக்கு தனி கோயிலும் கட்டப்பட்டது. இக்கோயில் குடமுழுக்கு விழா வரும் 14-ஆம் தேதி வேலூா் மாவட்டம் பொற்கோயில் - நாராயணி பீடம் சக்தி அம்மா தலைமையில் நடைபெறுகிறது. இதனையொட்டி சனிக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகா் வழிபாட்டுடன் விழா தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு விமான கலசங்கள் பூஜை, இரண்டாம் கால யாகங்கள், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகங்கள் நடைபெறுகிறது.மாா்ச் 14-ஆம் தேதி காலை 6 மணிக்கு நாடி சந்தானம், மகா தீபாராதனை, காலை 9 மணிக்கு மதுரை வீரன் கோயில் குடமுழுக்கு, பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்க்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க வரும் மத்திய அமைச்சா், சக்தி அம்மா ஆகியோருக்கு வாசம்-சுவாசம் அறக்கட்டளை நிறுவனா் பிரணவ்குமாா், பல்வேறு ஆன்மீக அமைப்பினா், பொதுமக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.