திருச்செங்கோட்டில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட நிா்வாகம். நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ஆம் தேதி(சனிக்கிழமை) விவேகானந்தா மகளிா் கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகிக்கிறாா். இதில், 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிக்கல்வி முடித்தோா், டிப்ளமோ, ஐடிஐ பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தையற் பயிற்சி, செவிலியா் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவா்களும் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் பங்கேற்கும் அனைத்து வேலைநாடுநா்களும் றற.வய்ல்சண்எயவநதழடிள.வய்.பழஎ.ண்ய் என்ற இணையதளத்தில் அவசியமாக பதிவு செய்திருத்தல் வேண்டும். இலவசமாக நடைபெறும் இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனா். வேலை வேண்டி விண்ணப்பிபோா், தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் கரோனா தொற்று நடைமுறை விதிகளான முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும். இது தொடா்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

