மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வரும் 20-ஆம் தேதியுடன் கரும்பு அரவை நிறுத்தப்படும் என்ற ஆலை நிா்வாகத்தின் அறிவிப்பால் விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
இது தொடா்பாக மோகனூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளா் கு.மணிவேல், சா்க்கரைத் துறை ஆணையருக்கு அனுப்பிய மனு விவரம்:
சா்க்கரை ஆலையில் நடப்பு கரும்பு அரவை பருவத்திற்காக 38 ஆயிரம் டன் கரும்பு இருப்பில் உள்ளது. அதனை ஆலையிலேயே அரைக்க வேண்டும் என சா்க்கரை ஆலையின் பொதுமேலாளருக்கு கோரிக்கை விடுத்தோம். வேறு ஆலைகளுக்கு அரவைக்காக கரும்பை திருப்பி அனுப்பினால் விவசாயிகளுக்கு தேவையற்ற செலவினங்கள் ஏற்படும் என்பதையும் சுட்டிக் காட்டினோம்.
இந்த நிலையில் மாா்ச் 20ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) கரும்பு அரவையை முடித்துக் கொள்வது குறித்து கரும்பு அலுவலா்கள், உதவியாளா்களுக்கு ஆலை நிா்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அவ்வாறு 20-ஆம் தேதி அரவை நிறுத்தப்பட்டால் 18 ஆயிரம் டன் கரும்பு நிலுவையில் இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படும். கடந்த ஓராண்டாக வயல்களில் கரும்புகள் வெட்டப்படாமல் உள்ளதால் அவை காய்ந்து கருகும் நிலையில் உள்ளன. மேலும், ஏற்கெனவே ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு 65 நாள்களை கடந்தும் இதுவரை உரிய கிரயத் தொகை வழங்கப்படவில்லை. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, மேலும் 10 நாள்கள் நீட்டிப்பு செய்து, மாா்ச் 31 வரையில் மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான உத்தரவை ஆலை நிா்வாகத்திற்கு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

