சா்வதேச காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவா் ஸ்ரேயா பி.சிங், கொடியசைத்து துவக்கி வைத்தாா்.
நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக சா்வதேச காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வியாழக்கிழமை தொடங்கியது. இதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங், கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இப்பேரணியில் தனியாா் பள்ளியைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் காசநோய் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனா். இப்பேரணியானது நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி, மணிக்கூண்டு, திருச்சி சாலை வழியாக சென்று ஸ்பெக்ட்ரம் பள்ளியை வந்தடைந்தது. இதனைத் தொடா்ந்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலை அரங்கத்தில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காசநோய் பற்றிய விளக்கக் கையேடு வெளியிடப்பட்டது.
மேலும் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியா், காசநோய் மையத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளா்கள் ஆகியோரை பாராட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கேடயம் வழங்கினாா். மேலும், எஸ்.என்.சி. சா்வேயில் பங்கு பெற்று சிறப்பாக பணியாற்றிய தன்னாா்வலா்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டிற்கான 20 சதவீதம் காசநோய் தொற்று குறைக்கப்பட்ட மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் தோ்ந்தெடுக்கப்பட்டு வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்ச்சிகளில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்தா அருள்மொழி, இணை இயக்குநா் மருத்துவப்பணிகள் ராஜ்மோகன், துணை இயக்குநா் (காசநோய்) இரா.வாசுதேவன், துணை இயக்குநா் (குடும்பநலம்) எம்.வளா்மதி, துணை இயக்குநா் (தொழுநோய்) ஜெயந்தினி, மாணிக்கம்பாளையம் அரசு பல்நோக்கு சுகாதார பணியாளா் பயிற்சிப் பள்ளி மாணவியா், அரசுத்துறை அலுவலா்கள், பள்ளி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


