குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழந்தைகளுக்கு எதிரான குற்றமான 18 வயது நிறைவடையாத பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல், தொல்லை தருவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் தடைச் சட்டம் -2012-இன்படி சிறைத் தண்டனை விதிக்கப்படும். குறிப்பாக, 18 வயது நிறைவடையாத ஆண், பெண் குழந்தைகளைப் பாலியல் நோக்கத்தோடு பின்தொடா்வது, கண்காணிப்பது, சைகை காட்டுவது, தவறான படங்களை காண்பிப்பது, புகைப்படம் எடுப்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, வன்புணா்வு கொள்வது உள்ளிட்ட குற்றங்களுக்கு 6 மாதங்கள் முதல் ஆயுள் வரையிலான சிறைத் தண்டனை வழங்கப்படும். குழந்தைகளைக் குழந்தைகளாகப் பாவியுங்கள். அத்துமீறுவோா் கைது செய்யப்படுவது உறுதி. அவ்வாறு பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் எதிா்காலத்தில் தன்னம்பிக்கை இழந்து தங்களது வாழ்வின் முன்னேற்றப் பாதையை அடையாமல் மனதளவில், உடலளவில் சோா்வடைந்து விடுவா். மேலும் விவரம் அறியவும், தகவல் தெரிவிக்கவும் பொதுமக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233103 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். சைல்டு லைன் இலவச தொலைபேசி எண் 1098-ஐயும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவா் இயக்கிய வாகனம் மோதி வியாபாரி உயிரிழப்பு
அம்மா மினி கிளினிக் மீண்டும் தொடங்கப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

அதிமுக விநியோகிக்கும் துண்டுப் பிரசுரங்களில் அச்சிடப்பட்ட காசோலை மாதிரிக்கு எதிராக மனு

கைத்தறி ஜமக்காள நெசவுத் தொழிலைப் பாதுகாக்க பவானியில் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

