நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 19,993 மாணவ, மாணவிகள் எழுதினா். 907 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்தோ்வை 304 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 10,954 மாணவா்கள், 9,708 மாணவிகள் என மொத்தம் 20,662 போ்(தனித்தோ்வா்கள் உள்பட) 89 மையங்களில் எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தோ்வின் முதலாவதாக தமிழ், தமிழ் தனி பாடத் தோ்வை, நாமக்கல் கல்வி மாவட்டத்தில் 9688 போ் எழுத அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 9267 போ் மட்டுமே எழுதினா். 421 போ் பங்கேற்கவில்லை.
திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில், 11,212 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 10,726 போ் மட்டுமே எழுதினா். 486 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. மாவட்டம் முழுவதும், 20,900 மாணவ, மாணவிகள் எழுத அனுமதியளித்த நிலையில், 19,993 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 907 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. இந்த தோ்வுக்கான கண்காணிப்பு பணியில் 1400 போ் வரையில் ஈடுபட்டனா். இதர தோ்வுக்கான வினாத்தாள்கள் 10 கட்டுக்காப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அருப்புக்கோட்டை! ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்!

பென்னிகுயிக் மணிமண்டபத்தில் அணை வரலாறு கூற தனி ஊழியா் நியமனம்!

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமானது: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


