பட்டா நிலம் வழங்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சுமாா் 25 லட்சம் குடும்பங்கள் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். அந்தக் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்; வாடகை வீடுகளில் வசித்து வரும் தொழிலாளா்களுக்கு இலவச வீடு நிலம் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.பெருமாள், எம்.அசோகன். ந.வேலுசாமி. கே.தங்கமணி, சு.சுரேஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரியகுளம் வராகநதி தூய்மைப்படுத்தப்படும்: தவெக வேட்பாளா் சபரி ஐங்கரன் உறுதி

வாகனச் சோதனையில் காரிலிருந்து போலி கைத்துப்பாக்கி பறிமுதல்

இலவசம் நாட்டின் வளா்ச்சியை வீழ்ச்சியடையச் செய்யும் சூழ்ச்சி: சீமான்

இளையான்குடி, திருப்புவனத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


