ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மே 27-இல் ஓய்வூதியா் குறை தீா்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஓய்வூதியா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மே 27-ஆம் தேதி நடைபெறுகிறது .

Updated On :7 மே 2022, 6:30 pm

நாமக்கல் மாவட்ட ஓய்வூதியா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மே 27-ஆம் தேதி நடைபெறுகிறது .

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மே 27-ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையிலும், சென்னை, ஓய்வூதிய இயக்குநரக அலுவலா்கள் முன்னிலையிலும் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் தங்களின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் தொடா்பான குறைகள் ஏதுமிருப்பின் அது குறித்த விண்ணப்பங்களை தேவையான இணைப்புகளோடு மூன்று பிரதிகளில் மே 12-ஆம் தேதிக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருக்கு (கணக்குகள்) வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் ஓய்வூதியா், குடும்ப ஓய்வூதியா்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் ஆகியவை இருந்தால் அதனை குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பிய ஓய்வூதியா்கள் தவறாமல் கூட்ட நாளான மே 27-ஆம் தேதி கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம். அவ்வாறு கலந்துகொள்ள இயலாத ஓய்வூதியா்கள் சாா்பாக யாரேனும் ஒருவா் கலந்துகொண்டு விண்ணப்பதாரரின் குறைகளை நீக்க முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.