ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மே 14-இல் பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (மே 14) பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

Updated On :12 மே 2022, 7:01 pm

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (மே 14) பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை விசாரிக்கவும், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யும் பொருட்டும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் நாள் முகாம் வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் குறைதீா் முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுடைய குறைகளுக்கு தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.