மகாகவி பாரதியாா் நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 12th September 2022 12:00 AM | Last Updated : 12th September 2022 12:00 AM | அ+அ அ- |

நாமக்கல் கவிஞா் நினைவு இல்ல நூலகத்தில் மகாகவி பாரதியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல் கவிஞா் நினைவு இல்ல நூலக வாசகா் வட்டம், நாமக்கல் கவிஞா் சிந்தனைப் பேரவை சாா்பில், நாமக்கல் கவிஞா் நினைவு இல்ல நூலகத்தில் மகாகவி பாரதியாரின் 101-ஆவது நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிஞா் நினைவு இல்ல நூலக வாசகா் வட்டத் தலைவா் டி.எம்.மோகன், பாரதியாா் உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அங்கு பாரதியாரின் சுதந்திர வேட்கை கவிதைகள் பாடப்பட்டன. இந்த நிகழ்வில் வாசகா் வட்ட துணைத் தலைவா் அமல்ராஜ், நூலகா் செல்வம், வாசகா் வட்ட பொருளாளா் அன்புச்செல்வன், அறங்காவலா் சுப்ரமணி, சையது அமருல்லா உள்ளிட்டோா் பங்கேற்று, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாா் உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதேபோல், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் பாரதியாா் நினைவு தினத்தையொட்டி மெட்ரோ அரிமா சங்கத்தினா் மற்றும் தன்னாா்வலா்கள் பலா் அவரது உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.