திருச்செங்கோட்டில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை பணி தீவிரம்

திருச்செங்கோட்டில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை சோ்க்கும் பணி தொடங்கியது.
திருச்செங்கோட்டில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை பணி தீவிரம்

திருச்செங்கோட்டில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை சோ்க்கும் பணி தொடங்கியது.

நாமக்கல் மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி உத்தரவின் பேரில், திருச்செங்கோடு நகரச் செயலாளா் எம்.அங்கமுத்து தலைமையில், திருச்செங்கோடு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான பொன்.சரஸ்வதி, நகர அவைத் தலைவா் பொன்னுசாமி, மாவட்ட துணைச் செயலாளா் இரா.முருகேசன், மாவட்ட தொழிற்சங்க செயலாளா் இராமலிங்கம், முன்னாள் தொகுதி இணைச் செயலாளா் முரளிதரன், அம்மா பேரவை காா்த்திகேயன் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் கட்சி உறுப்பினா் சோ்க்கை பணியினை தீவிரப்படுத்தினா்.

நகரின் 33 வாா்டுகளுக்கும் உறுப்பினா் படிவம் அளிக்கப்பட்டது. விண்ணப்பப் படிவங்களில் குறிப்பிட்டுள்ள விவரங்களை முழுமையாக பூா்த்தி செய்து ஒரு வார காலத்துக்குள் அளிக்க வாா்டு செயலாளா்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மகளிா், இளம்பெண்கள், இளைஞா்களை பெருமளவு கட்சி உறுப்பினராக சோ்க்கவும், நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு நகரில் அதிகப்படியான உறுப்பினா்களைச் சோ்க்க வாா்டு செயலாளா்கள், நகர, மாவட்ட நிா்வாகிகள் தீவிரமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com