பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஊராட்சிக்கு உட்பட சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையங்கள் மற்றும் வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியா்களின் கற்றல் திறன் குறித்து புத்தகங்களை வாசிக்கச் செய்து நாமக்கல் ஆட்சியா் பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து சோழசிராமணி ஊராட்சி அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். அட்டவணைப்படி குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றனவா எனவும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு தரம் குறித்தும் ஆய்வு செய்தாா். மேலும் குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை, குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்து அங்கன்வாடிப் பணியாளா்களிடம் கேட்டறிந்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினாா்.
பின்னா் சோழசிராமணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.11.29 லட்சம் மதிப்பீட்டில் நீா்வரத்து கால்வாய் ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இப்பணியை நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது, கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரைசாமி, பாஸ்கா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்த 5 போ் கைது
பெண்ணிடம் அத்துமீறியவா் கைது

ஆலங்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரக் கேடு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



