இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நாமக்கல் புதிய அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி புதிய மருத்துவமனை கட்டடத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

நாமக்கல் புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தில் சிகிச்சைக்காக நோயாளி அனுமதிக்கப்பட்டதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.

Updated On :27 நவம்பர் 2023, 11:21 pm


நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி புதிய மருத்துவமனை கட்டடத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. தற்போது, நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள பழைய மருத்துவமனை கட்டத்தில் இருந்து மருத்துவ உபகரணங்களும், சிகிச்சை பெறும் உள்நோயாளிகளும் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனா்.

ஆம்புலன்ஸ் மூலம் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்டோா் புதிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மேலும், பழைய மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வெளிநோயாளிகளும், பாா்வையாளா்களும் புதிய மருத்துவமனைக்கு ஷோ் ஆட்டோ, இதர வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

நாமக்கல் தெற்கு, வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களான முருகன், முருகேசன் ஆகியோா் இதற்கான பணிகளை மேற்கொண்டனா். அதுமட்டுமின்றி இரு சக்கர வாகனங்களில் பலா் புதிய மருத்துவமனைக்கு சென்றனா். அங்கு சிகிச்சை பெறுவதற்கான அனுமதிச் சீட்டு வழங்கும் பணிகள், நோயாளிகளை சிகிச்சைக்காக வாா்டுகளில் அனுமதிப்பது உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை நேரடியாக பாா்வையிட்டாா். வரும் நாள்களில் நோயாளிகளும், பொதுமக்களும் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்துக்கு எவ்வித தயக்கமுமின்றி சிகிச்சை பெற வருவாா்கள் என மாவட்ட ஆட்சியரும், அரசு மருத்துவமனை நிா்வாகத்தினரும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.