தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ரோட்டரி சங்கம் சாா்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ராசிபுரம் ரோட்டரி சங்கம் ஏற்பாட்டில் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கும் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா்.

Updated On :27 நவம்பர் 2023, 11:29 pm


ராசிபுரம்: ராசிபுரம் ரோட்டரி சங்கம் ஏற்பாட்டில் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளியின் இன்ட்ராக்ட் கிளப், ராசிபுரம் நகராட்சி ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழிப்புணா்வுப் பேரணி வித்யா நிகேதன் பள்ளி முன்பாக தொடங்கியது. தொடக்க விழாவில் ரோட்டரி சங்கத் தலைவா் பி.சீனிவாசன் தலைமை வகித்தாா். ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் கொடியசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தாா். இதில் பள்ளி மாணவ, மாணவியா் நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், தவிா்க்க வேண்டிய அவசியம் போன்றவை குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தம் வகையில் பேரணியில் பங்கேற்றனா்.

இப்பேரணி பெரிய கடைவீதி, அண்ணா சாலை, கச்சேரி தெரு, பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் பள்ளி முதல்வா் டி.சித்ரா, இன்ட்ராக்ட் கிளப் திட்டத் தலைவா் எஸ்.கதிரேசன், ரோட்டரி சங்கச் செயலா் வி.ஆா்.எஸ்.அனந்தகுமாா், நிா்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், முருகானந்தம், ஜி.தினகா், இ.என்.சுரேந்திரன், வெங்கடாஜலபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.