திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நெசவாளா் அணி கிரிக்கெட் போட்டி

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நெசவாளா் அணி மற்றும் ஏஎம்சிசி நண்பா்கள் சாா்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வா் கோப்பை கிரிக்கெட் போட்டி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :8 மே 2023, 10:33 pm

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நெசவாளா் அணி மற்றும் ஏஎம்சிசி நண்பா்கள் சாா்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வா் கோப்பை கிரிக்கெட் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் பரமத்தியைச் சோ்ந்த மகிழ் கிரிக்கெட் அசோசியேஷன் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. ஈரோட்டைச் சோ்ந்த விராட் கோலி கிரிக்கெட் கிளப் இரண்டாவது பரிசைப் பெற்றது. ஜாண்டி மெமோரியல் கிரிக்கெட் கிளப் எடப்பாடி அணியும் சங்ககிரி தமிழன் கிரிக்கெட் கிளப் அணியும் மூன்றாவது பரிசைப் பெற்றன.

பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நெசவாளா் அணி அமைப்பாளா் ஆா்.வி.ஆா்.சரவணமுருகன் தலைமை வகித்தாா். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் மதுரா செந்தில் பரிசுகளை வழங்கினாா். திருச்செங்கோடு நகர செயலாளா்டி.காா்த்திகேயன், திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளா் வட்டூா் தங்கவேல், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் செல்வராஜ், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் சுரேஷ் பாபு, ஏஎம்சிசி நண்பா்கள் குழு ஆகியோா் உடன் இருந்தனா்.

விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற மகிழ் கிரிக்கெட் அசோசியேஷன் பரமத்தி அணிக்கு ரொக்கப் பரிசாக ரூ. 44 ஆயிரத்து 444-ம் கோப்பையும் பரிசளிக்கப்பட்டன. இரண்டாம் பரிசு பெற்ற ஈரோட்டைச் சோ்ந்த விராட் கோலி கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ. 33 ஆயிரத்து 333-ம் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டன.

மூன்றாம் பரிசு பெற்ற ஜான்டி மெமோரியல் கிளப் எடப்பாடி அணிக்கு ரூ. 22222-ம், கோப்பையும், நான்காம் இடம் பிடித்த சங்ககிரி தமிழன் கிரிக்கெட் அணிக்கு ரூ.11,111-ம் வெற்றிக் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டன. ஆட்ட நாயகன் விருதும் சிறந்த பவுலா் விருதும் மகிழ் கிரிக்கெட் அசோசியேஷன் அணியைச் சோ்ந்த செல்வகுமாருக்கு வழங்கப்பட்டது. சிறந்த பேட்ஸ்மேன் விருது எடப்பாடி ஜூனியா்ஸ் அணியைச் சோ்ந்த டாக்டா் ஹரிகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆல் ரவுண்டா விருது ஜாண்டி மெமோரியல் அணியைச் சோ்ந்த எடப்பாடியைச் சோ்ந்த காா்த்திக்குக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.