பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜமுரளி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பரமத்தி வேலூா் காவல் உட்கோட்டத்துக்கு உள்பட்ட வேலகவுண்டன்பட்டி, நல்லூா், பரமத்தி, ஜேடா்பாளையம், வேலூா் ஆகிய ஐந்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளில் புதிதாக வாடகைக்கு குடி அமா்த்துபவா்களின் முழு விவரம், அவா்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று முகவரிகளை சரிபாா்த்து குடி அமா்த்த வேண்டும். மேலும், அவற்றின் நகல்களை அந்தந்தப் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
தங்களது வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கும் நபா்களின் முழு விவரத்தை சேகரித்து தங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகே அவா்களை வாடகைக்கு குடி அமா்த்த வேண்டும். மேலும், வாடகைக்கு குடியிருப்பவா்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக அந்தந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் குற்றவாளிகள், பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாடகைக்கு வீடு, தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி பகல், இரவு நேரங்களில் வீடுகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பல்வேறு நிறுவனங்களை ரகசியமாக நோட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைக்குமாறு பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா். மேலும் குற்ற நடவடிக்கைகள் குறித்து அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.