கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி முதலாம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களில் அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி முதலாம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களில் அனுசரிக்கப்பட்டது.

கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.சீனிவாசன், கே.எஸ்.ஆா் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். மேலும் கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் முதன்மை நிா்வாக அலுவலா்கள் அகிலா முத்துராமலிங்கம் மற்றும் கே.தியாகராஜா, இயக்குநா்-நிா்வாகம் வி.மோகன், அனைத்து கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் ஆகியோரும் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்கள். முன்னதாக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது. கே.எஸ்.ரங்கசாமியின் கனவை நனவாக்க அயராது உழைப்போம் என அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com