அரசுப் பேருந்து மோதி பெண் பலி
By DIN | Published On : 16th September 2023 12:18 AM | Last Updated : 16th September 2023 12:18 AM | அ+அ அ- |

நாமக்கல் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெண் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியானாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
திருச்சியில் இருந்து நாமக்கல் வழியாக பெங்களூரு நோக்கி அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் சென்று கொண்டிருந்தது. பொம்மைக்குட்டைமேடு பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் மீது பேருந்து திடீரென மோதியது. இதில், அந்த வாகனத்தில் சென்ற பேளுக்குறிச்சி மலைவேப்பன்குட்டையைச் சோ்ந்த ராஜேந்திரனின் மனைவி ஜீவா(40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த நல்லுசாமியின் மனைவி கோமதி (27) என்பவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...