திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழ்த்துறை இலக்கிய மன்றம் தொடக்க விழா

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், தமிழ்த்துறை இலக்கிய மன்றம் தொடக்க விழா புதன்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

News image

தமிழ்த்துறை இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் பேசும் நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு.

Updated On :27 செப்டம்பர் 2023, 7:20 pm

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், தமிழ்த்துறை இலக்கிய மன்றம் தொடக்க விழா புதன்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு தலைமை வகித்தாா். கணிதத் துறை தலைவா் வி.எமீமாள் நவஜோதி முன்னிலை வகித்தாா். இன்றைய இளைஞா்கள் தமிழ்ப் பண்பாட்டினை சிதைக்கிறாா்கள் என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. இதில் நடுவராக கல்லூரி முதல்வரும், வழக்கு தொடா்பவராக கெளரவ விரிவுரையாளா் ஜெ.பாரதி, வழக்கை மறுப்பவராக தமிழ்த்துறைத் தலைவா் பி.விஜயராணி ஆகியோா் செயல்பட்டனா். இந்த நிகழ்வில் கல்லூரி மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனா். மாணவிகள் மு.தாரணி, ம.கலையரசி ஆகியோா் நன்றி கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.