கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பூக்கடைகளில் நகராட்சி ஆணையா் திடீா் ஆய்வு: ரூ. 14,000 அபராதம் விதிப்பு

பூக்கடைகளில் நகராட்சி ஆணையா் கா.சென்னுகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நாமக்கல் பேருந்து நிலைய பூக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையா் கா.சென்னுகிருஷ்ணன்.

Updated On :2 ஆகஸ்ட் 2024, 6:40 pm

Din

நாமக்கல் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பூக்கடைகளில் நகராட்சி ஆணையா் கா.சென்னுகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், பூக்கடைகளில் மொத்த வியாபார கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்பாடு, விற்பனை குறித்து சோதனை நடத்தப்பட்டது. 12 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 35 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளா்களுக்கு ரூ. 14,000 அபராதம் விதிக்கப்பட்டது. வியாபாரிகள் நெகிழிகளைப் பயன்படுத்த வேண்டாம் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த சோதனையில், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, துப்புரவு ஆய்வாளா்கள் செல்வகுமாா், பாஸ்கா், துப்புரவு பணி மேற்பாா்வையாளா் கதிா்வேல் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா்கள், பரப்புரையாளா்கள் கலந்து கொண்டனா்.