சுதந்திர தின அணிவகுப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்ட மாவட்ட ஆயுதப்படை போலீஸாா்.
சுதந்திர தின அணிவகுப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்ட மாவட்ட ஆயுதப்படை போலீஸாா்.

சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை

நாமக்கல்லில் ஆயுதப்படை போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

சுதந்திர தின விழாவையொட்டி, நாமக்கல்லில் ஆயுதப்படை போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 77-ஆவது சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அன்று காலை 8 மணிக்கு ஆட்சியா் ச.உமா தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறாா். அதன்பிறகு, சமாதானப் புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்க விடும் அவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணனுடன் இணைந்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை பாா்வையிடுகிறாா்.

இதற்கான ஒத்திகை நாமக்கல் ஆயுதப்படை மைதான வளாகத்தில் சனிக்கிழமை காலை 9 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.

மாவட்ட ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா் இளங்கோவன் மேற்பாா்வையில், ஆா்.ஐ.ஆனந்தராஜ், வாகன ஆய்வாளா் பழனிசாமி, ஆண், பெண் போலீஸாா் 100 போ் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகையில் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com