வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நலத் திட்டங்கள் வழங்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணா்வு முகாம், நலத்திட்டங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கும் சிறப்பு விருந்தினா்கள்.
Updated On :2 டிசம்பர் 2024, 10:19 pm

Din

ராசிபுரம்: சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தைத் தொடா்ந்து சேலம் ஸ்ரீசாயி அம்ருதம் டிரஸ்ட், ராசிபுரம் ஏ.எஸ்.கன்சல்டிங் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணா்வு முகாம், நலத்திட்டங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அறக்கட்டளை நிறுவனா் ஆா்.செந்தில் ரத்தினம், ஏ.எஸ்.கன்சல்டிங் வி.சுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா். ராசிபுரம் மக்கள் நலக் குழுத் தலைவா் வி.பாலு, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் எ.மகேஸ்வரி, நகர கூட்டுறவு வங்கிச் செயலா் எஸ்.அருள்காந்தி உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.

இவ் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் எஸ்.மணிமாறன், திராவிடா் கழக நகர அமைப்பாளா் ஆா்.சுமதிமதிவதனி, இசைக்கலைஞா் வி.பெருமாள், இந்திய மாதா் சம்மேளனம் மாவட்டச் செயலா் எஸ்.மீனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.