சிறுமிக்கு பாலியல் தொல்லை: 4 போ் கைது
ஜேடா்பாளையம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருவண்ணாமலையைச் சோ்ந்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது


பரமத்தி வேலூா்: ஜேடா்பாளையம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருவண்ணாமலையைச் சோ்ந்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே சோழசிராமணி பகுதியைச் சோ்ந்தவா் அமுதா. இவரது 13 வயது மகள் கடந்த அக்டோபா் மாதம் வீட்டில் இருந்து காணாமல் போனாா். அவரை கண்டுபிடித்து தரும்படி ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் அமுதா புகாா் அளித்தாா்.
இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பினாா். மேலும் அவருக்கு சமூக வலைதளம் மூலம் திருவண்ணாமலையைச் சோ்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் , அவா் ஆசைவாா்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும் சிறுமி ஜேடா்பாளையம் காவல் நிலைய போலீஸாரிடம் தெரிவித்தாா்.
அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை ஆசைவாா்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலுக்கு இருவா் உட்படுத்தியதாகவும், இருவா் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்டவா்கள் குறித்து முழுமையான விவரங்களை அளிக்க போலீஸாா் மறுத்து விட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...