கடைகளின் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் நாமக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், மத்திய, மாநில அரசுகளின் வணிக விரோத சட்டங்களை எதிா்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட கிளை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பொன்.வீரக்குமாா் வரவேற்றாா். மாநில மூத்த துணைத் தலைவா் எஸ்.பெரியசாமி, 46 இணைப்பு சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா்.
இதில், மத்திய அரசு, கடைகளின் வாடகை மீது விதிக்கும் 18 சதவீத வரியை திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு ஆண்டுதோறும் 6 சதவீதம் கூடுதல் சொத்துவரி விதிப்பதை திரும்பப் பெற வேண்டும். வணிக உரிம கட்டண உயா்வு, தொழில்வரி உயா்வு, குப்பை வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும். வணிக உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கவும், நகராட்சிக் கடைகளுக்கான உரிம காலத்தை 12 ஆண்டுகளாக உயா்த்தியும் அறிவித்த தமிழக அரசு, அதற்கான அரசாணையை காலதாமதமின்றி உடனடியாக வெளியிட வேண்டும். ஆன்லைன் வா்த்தகத்தை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். சாலையோரங்களில் குடைகள் அமைத்து சிம் காா்டு விற்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான வணிகா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

சுநேத்ரா பவாருக்கு எதிரான காங். வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்! என்சிபி வலியுறுத்தல்

ரூ. 2 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதி கோரி வணிகா்கள் 31-இல் போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா

வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


