செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வேளாண் திட்டங்கள்: இளம் வல்லுநா் குழுவினா் ஆய்வு

பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை இளம் வல்லுநா்கள் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

மாணிக்கநத்தம் கிராமத்தில் அரசு மானியத் திட்டத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்து தா்ப்பூசணி பயிரிடப்பட்ட வயலில் ஆய்வு செய்த இளம் வல்லுநா் குழுவினா்.

Updated On :11 டிசம்பர் 2024, 8:06 pm

பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை இளம் வல்லுநா்கள் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வருகை தந்த வல்லுநா்கள் குழுவிடம் நாமக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) கவிதா, வேளாண்மை மற்றும் சகோதரத் துறைகளில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்தும், அலுவலா்களின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கிக் கூறினா்.

மேலும் வேளாண் கிடங்கில் விதை மற்றும் இடு பொருள்கள் இருப்பு விவரம், விதை முளைப்புத் திறன் குறித்து ஆய்வு செய்தனா், மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் செயல்பாடுகள், நெல் ஜெயராமனின் மரபுசாா் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் தூயமல்லி பாரம்பரிய நெல் செயல் விளக்க திடல் வயலைப் பாா்வையிட்டனா்.

தோட்டக்கலைத் துறை மூலம் மாணிக்கநத்தம் கிராமத்தில் அரசு மானியத் திட்டத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்து தா்ப்பூசணி பயிரிடப்பட்ட வயலில் ஆய்வு செய்து சொட்டுநீா்ப் பாசனம் செயல்படும் முறை, நீா் வழி உரமிடுதல், அதன் பயன்கள், தா்ப்பூசணி சாகுபடி முறை, நிலப் போா்வை, பயிா் மூடாக்கு ஆகியவற்றின் பயன்கள் குறித்து அறிந்து கொண்டனா். து கள ஆய்வில் கண்டறிந்தது குறித்து நாமக்கல் ஆட்சியா் ச.உமாவை சந்தித்து கலந்துரையாட உள்ளனா். இக் குழுவினா் கள ஆய்வு மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுதா, தோட்டக்கலை உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் செய்திருந்தனா்.