சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

மின்வாரிய ஊழியா்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

மின்வாரிய ஊழியா்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

News image

பயிற்சி முகாமில் பங்கேற்ற மின்வாரிய ஊழியா்கள், அலுவலா்கள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் சாா்பில் மின்வாரிய ஊழியா்கள், அலுவலா்களுக்கான மின்பயன்பாடு பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் சரவணா மஹாலில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் தலைமை வகித்தாா். ராசிபுரம் கோட்ட அளவிலான மின் ஊழியா்களுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி முகாமில் மின்வாரிய மேட்டூா் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையம் சாா்பில் ஒய்வு பெற்ற மின்சார செயற்பொறியாளா் முருகேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். ஊழியா்களுக்கு பாதுகாப்பான முறையில் மின்சாரத்தைக் கையாள்வது குறித்து அவா் பயிற்சியளித்தாா்.